‘நடு ராத்திரி’.. ‘பாத்ரூமில் இருந்து வந்த சத்தம்’.. திறந்து பார்த்து மிரண்டு போன நபர்..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 07, 2019 11:49 AM

இரவில் வீட்டுக்குளியலறையில் முதலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man wakes up midnight and find Crocodile in bathroom

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்து வருபவர் மஹேந்திரா பதியார். இவர் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது விநோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே எழுந்த அவர் சத்தம் எங்கிருந்த வருகிறது என தேடியுள்ளார். அப்போது குளியலறையில் இருந்து அந்த சத்தம் வருவதை அறிந்து பூனையாக இருக்கலாம் என எண்ணி திறந்து பார்த்துள்ளார். ஆனால் வாயை திறந்தபடி ஒரு முதலை இருந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மஹேந்திரா உடனே குளியலறையின் கதவை மூடிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சுமார் 1 மணிநேர போரட்டத்துக்குபின் முதலையை பிடித்துள்ளனர். பிடிக்கும்போது முதலை ஆவேசமாக இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விஷ்வமித்ரி நதியில் இருந்த இந்த முதலை வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் வதோதரா பகுதியில் வெள்ளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #GUJARAT #CROCODILE #MIDNIGHT