ஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 12, 2020 06:19 PM

சிங்கப்பூரில் தனக்கு கொரோனா இருப்பதாக பொய் சொல்லி அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்க வைத்தவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Chinese Man Lied About Having Corona to Avoid Going To Office

சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து வைரஸ் பாதிப்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மற்றவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது அலுவலகத்திற்கு போன் செய்து, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுதால் தன்னால் அலுவலகத்திற்கு வர முடியாது எனக்  கூறியுள்ளார்.

அதைக்கேட்டு பதறிப்போன அந்த அலுவலக நிர்வாகிகள் உடனடியாக ஒட்டு மொத்த அலுவலகத்திற்கும் விடுமுறையை அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா அச்சுறுத்தலால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையின்போது, கொரோனா இருப்பதாக அந்த நபர் பொய் சொல்லியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் தனக்கு விடுமுறை தேவைப்பட்டதால் அப்படி பொய் சொன்னதாகக் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அவருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை மற்றும் அதன்பிறகு 6 மாதம் வேலை செய்யத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை வேண்டுமென ஊழியர் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக பொய் சொல்லி அலுவலகத்தையே 3 நாட்களுக்கு மூட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #CHINA #CORONAVIRUS #OFFICE #LIE