‘என்ன மன்னிச்சிருங்க ஆச்சி’!.. ‘அவங்க ரொம்ப பாவம்’.. சிக்கிய உருக்கமான கடிதம்..! நொருங்கிபோன குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 16, 2020 10:59 AM

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tenkasi young girl commits suicide before wrote letter

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாவலியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி மருதக்கனி. இவர்களுக்கு மாரியம்மாள் (18) என்ற மகளும், விக்னேஷ் (15), மகாராஜன் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மாரியம்மாள் சங்கரன்கோவிலில் உள்ள பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கி தட்டச்சு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை சாமி கும்பிட பாபநாசத்துக்கு காளியம்மாள் சென்றுள்ளார். பின்னர் இரவு 9 மணியளவில் காளியம்மாள் வீடு திரும்பியபோது வீட்டில் பேத்தி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியைடைந்துள்ளார். உடனே அருகில் உள்ள உறவினர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால் பேத்தி குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் மாரியம்மாள் சடலமாக கிடந்ததைப் பார்த்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாள் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கைப்பற்றியுள்ளனர். அதில், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தன்னால் முடிந்த அளவுக்கு படிச்சு பார்த்தும் முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாரியம்மாள் தட்டச்சு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்காலம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.