‘பாப்புலர் ஆயிடலாம்னுதான் இப்படி செஞ்சோம்!’ .. ‘போலீஸை சுத்தலில் விட்டு’ சிசிடிவியால் சிக்கிய இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 13, 2020 08:04 AM

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த அதவத்தூர் சிவா நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டட ஒப்பந்த பணியாளர் சக்திவேல். அரசியல் ஆர்வத்துடன் இருக்கும் சக்திவேலின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்திருந்தார்.

man sets fire on his own bike to become popular trichy

அந்த புகாரில் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றதாகவும் நள்ளிரவு 2 மணிக்கு வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்றும் பின்னர் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திதாகவும் சக்திவேல் குறிப்பிட்டிருக்கிறார். இவர் கூறியதை நம்பி இந்த புகாரை எடுத்துக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தும் விதமாக சக்திவேலின் வீடு உள்ள அதவத்தூர் சிவா நகரின் சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்தனர்.

ஆனால் அதில் போலீசார் கண்டதோ அதிர்ச்சியான காட்சி. காரணம் சக்திவேல் தன்னுடைய ஆதரவாளர்களான முகேஷ் உள்ளிட்டோருடன் இணைந்து தன் பைக்கை தானே கொளுத்தியது அந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியது. இதனை அடுத்து சக்திவேலுடன் அவருடைய நண்பர்களை சேர்த்து 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அரசியல் உயர் பதவிகளை அடைவதற்கு பிரபலமாக வேண்டியது அவசியம் என்று நினைத்த சக்திவேல், வீட்டுக்கு வாடகை தர முடியாத நிலையிலும், பைக் லோன் கட்ட முடியாமல் கஷ்டப்படும் நிலையிலும், தனது பைக்கை தானே கொளுத்திவிட்டு மர்மநபர்கள் கொளுத்தியதாக நாடகமாடினார். பிரபலமானால் அரசியலில் உயர் பதவிகளும், உதவிகளும் கிடைக்கும் என்று தனது பைக்கை தானே பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொண்டதாக சக்திவேல் ஒப்புக்கொண்டார்.

Tags : #POPULAR #YOUTH #POLICE #BIKE #CCTV