'இதெல்லாம் பண்ணுங்க... கொரோனா கிட்ட இருந்து தப்பிச்சுடலாம்!'... தீவிரவாதிகளுக்கு சுகாதார ஆலோசனை வழங்கி... பரபரப்பைக் கிளப்பிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Mar 16, 2020 04:47 PM

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

isis terrorist group advice for coronavirus pandemic

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

எந்த ஒரு நோயும் தானாக மண்ணில் வந்துவிடாது. கடவுள் யாரை தண்டிக்க விரும்புகிறாறோ அவர்களையே நோய் தாக்கும். நம்பிக்கை வைக்கும் அதே வேளையில், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஐரோப்பாவுக்கு நம் அமைப்பைச் சேர்ந்த யாரும் செல்லக்கூடாது. நம் அமைப்பைச் சேர்ந்தவர்களில் யாருக்காவது கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தால், அவர்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். யாரெல்லாம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்களோ, அவர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டாம். யாருக்கெல்லாம் நோய் தொற்று உள்ளதோ, அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வேறு எங்கும் போகக் கூடாது. கொட்டாவிவிடும்போது, தும்மலின் போது வாயை மூட வேண்டும். கைகளையும் அடிக்கடி கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆயதங்களைக் காட்டி, உலக மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள், கொரோனாவைக் கண்டு அஞ்சுவது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பி வருகிறது.

 

Tags : #ISIS #TERRORISM #CORONAVIRUS