கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..? பதிலளித்த தேர்வுக்குழு தலைவர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 22, 2019 10:44 AM

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

MSK Prasad breaks silence on MS Dhoni\'s retirement

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அறிவித்தார். இதில் கேப்டன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாக மீண்டும் விராட் கோலியே அணியை வழி நடத்தி செல்கிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி பாரா மிலிட்டரி பிரிவில் பணியாற்ற போவதாக கூறியதால இந்த தொடரில் அவர் இடம்பெறவில்லை. இதனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிக்கு விக்கெட் கீப்பராக மீண்டும் சஹா அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து கேட்கபட்ட கேள்விக்கு பதிலளித்த எம்.எஸ்.கே பிரசாத், ‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது. பாரா மிலிட்டரியில் தோனி பணியாற்ற போவதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவர் ஒரு ஜாம்பவான். ஓய்வை எப்போது அறிவிக்க வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். தேர்வுக்குழு தலைவர் என்ற முறையில் அணியின் எதிர்காலம் கருதி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ரிஷப் பந்த் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடுகிறார். அதில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடும் வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுகுறித்து நாங்கள் தோனியிடம் முன்னமே ஆலோசித்தோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #MSDHONI #RISHABHPANT #TEAMINDIA #INDVWI #MSK PRASAD