‘இது சூப்பர் ஐடியா’.. தண்ணீர் தட்டுப்பாட்டைத் தடுக்க மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 26, 2019 09:41 AM

மதுரையில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் முறையில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளன.

Madurai corporation fixed GPS in water lorries

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் தங்களது அன்றாட தேவைககளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதனை சரிசெய்ய தமிழக அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் சென்னை குடிநீர் வாரியமும் மக்களிடம் சில வேண்டுகோள்களை வைத்தது. அதில் ஷவரில் குளிக்காமல் வாலியில் தண்ணீர் பிடித்து குளிப்பது, கார், பைக் போன்ற வாகனங்களை தண்ணீர் கொண்டு கழுவாமல் ஈரத்துணியின் மூலம் துடைப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை மக்கள் முன் வைத்தது. ஏனென்றால் இதனை குடிநீராக பயன்படுத்தும் மக்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். மேலும் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன.

இந்நிலையில் இதற்கு தீர்வுகாணும் விதமாக மதுரை மாநகராட்சி, தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தியுள்ளது. இதன்மூலம் லாரியில் தண்ணீர் நிரம்பியதும் தானாக தண்ணீர் வருவது நின்றுவிடும் வசதியும், லாரிகள் செல்லும் வேகம், பாதையைக் காண்காணிக்கும் வசதியும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை மக்கள் தங்களது செல்போன் மூலம் பார்க்கும் வசதியும் செய்ய உள்ளதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : #WATERSCARCITY #MADURAI