‘காவல் நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை..’ மதுரையில் நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 12, 2019 07:24 PM

காவல் நிலையத்துக்கு கையெழுத்து போட வந்த  இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youngster brutally killed by gang near police station in Madurai

மதுரை செல்லூரைச் சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் ஆகியோர் இன்று காலை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்துப் போடுவதற்காக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ரஞ்சித்தை போலீஸார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த மாதம் செல்லூர் பகுதியில் திருவிழாவின்போது அஜித் தரப்புக்கும், விக்கி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதம் காரணமாகவே அஜித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காலை நேரத்தில் காவல் நிலையம் அருகேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #MADURAI