வீடுபுகுந்து தலையை வெட்டி குப்பையில் வீசிய மர்ம கும்பல்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | May 25, 2019 09:10 PM
மதுரையில் மர்ம கும்பல் வீடுபுகுந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் முத்துப்பட்டி என்கிற பகுதியில் சவுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். மாலை வேளையில் சவுந்தர் தனது விட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் சவுந்தரை கொடூரமாக தாக்கியுள்ளது. இதனை தடுக்க வந்த சந்தரின் மாமா லோகநாதன் என்பவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதனை அடுத்து சவுந்தரின் தலை துண்டித்த அக்கும்பல் சற்று தொலைவு எடுத்து சென்று குப்பையில் வீசி சென்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சந்தரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகநாதனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சவுந்தரின் மீது பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதத்தின் காரணமாக கொலை நடந்ததா இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடுபுகுந்து தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
