‘பட்டாசு வெடிச்சதுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம்’ .. பண்டிகை நாளில் தமிழருக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 01, 2020 06:13 PM

பண்டிகை நாள் அதுவுமாக பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil man fined 15 lakh for blasting crackers in festival

சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை இருந்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி தீபாவளி பண்டிகையின் போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் 43 வயதான சீனிவாசன் சுப்பையா முருகன் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினார்.

இது தொடர்பாக முருகன் மீது நேற்று கோர்ட்டில் நடந்த இறுதி விசாரணையில், முருகன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து முருகனுக்கு  3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர், அதாவது ரூ.15 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Tags : #CRACKERS #CHINA #FESTIVAL