‘சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்’.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அசத்தல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 16, 2019 08:08 PM

சென்னை மாநகர பேருந்துகள் சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai city govt buses being rented for festival

சமீபத்தில் சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இறங்கும் இடத்தை முன்னமே அறிவிக்கும் ஜிபிஎஸ் கருவியை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முதல்கட்டமாக 50 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்னை மாநகராட்சி பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகள், சுற்றுலா, விழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரி குழு பயணம் என சென்னை மாநகரத்துக்குள் எங்கு சென்றாலும் அரசு பேருந்து வாடகைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #MTC #CHENNAI #FESTIVAL