"உங்களோட ஏடிஎம் கார்ட்ல வேற ஒருத்தரு பேர் இருக்கு?"... "30 ஆயிரம் ரூபாய் அபேஸ்"... "நூதன முறையில் திருட்டு"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 10, 2020 07:55 PM

பணம் எடுத்துத் தருவதாகக்கூறி 30 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ATM money robbery in Perambalur makes people wonder

பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன். இவரும் இவர் மருமகன் பாலமுருகனும், பொங்கல் செலவுக்காகப் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுக்கத் தெரியாமல் பாலமுருகன் திணறியுள்ளார். இதைச் சாதகமாக வைத்து, ஏடிஎம் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர், தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி, அவரது கவனத்தை திசைதிருப்பிவிட்டு, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை லாவகமாகத் திருடியுள்ளார்.

மேலும், பணத்தை எடுத்துவிட்டு பாலமுருகனிடம் இருந்து வாங்கிய ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு தப்பித்துள்ளார்.

பின்னர், சிசிடிவி காட்சிகளின் மூலம், போலீசார் திருடனை அடையாளம் கண்டு, விசாரனை நடத்தி வருகின்றனர். நூதன முறையில் பணம் திருடிய இச்சம்பவம் பெரம்பலூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROBBERY #ATM #PERAMBALUR