இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 18, 2019 07:07 PM
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழை பெய்துவந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வருகிற 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.