சானியா மிர்சாவின் 'தங்கை'யை மணக்கும்... முன்னாள் 'கேப்டன்' மகன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 07, 2019 05:05 PM
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை ஆனம், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாரூதீன் மகனை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவரான அசாரூதீன், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் ஆசாத். இவருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை ஆனம்க்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
இதனை சானியா மிர்சா உறுதி செய்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''ஆம். எனது தங்கை அழகான ஒரு பையனை திருமணம் செய்யவுள்ளார். அவர் பெயர் ஆசாத். திருணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,'' என தெரிவித்துள்ளார்.
Tags : #CRICKET
