என்ன.. 'முட்டை' சாப்பிடாம இருந்தா.. இவ்ளோ 'பிரச்சினை' வருமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 11, 2019 09:48 PM

ஒரு முட்டையில்,தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமக்கு கண் நோய்கள் வராமல்,கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

Having an egg can improve your health in multiple ways

இதுதவிர உடல் எடையைக் குறைப்பதற்கும் முட்டை  உதவி செய்யும் என்பதால் நம் அன்றாட உணவில் தாராளமாக முட்டையை  சேர்த்துக்கொள்ளலாம்.இந்தியாவை பொறுத்தவரை மூன்றில் ஒரு குழந்தை எடைக்குறைவு மற்றும் வளர்ச்சிக்குறைபாடு நோய்கள் பாதிப்புக்கு ஆளாகிறது. உணவுக்குறைபாடு தொடர்பான நோய்களால் நாளொன்றுக்கு சராசரியாக 3000 குழந்தைகள் இறக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனங்கள் பலவும் உதவி புரிந்து வருகின்றன.

அந்த வகையில் SKM Eggs என்னும் நிறுவனம் Hatch A Smile என்னும் பெயரில்  புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்கி வருகிறது. அதாவது ஒரு பின்தொடர்தலுக்கு ஒரு முட்டை என்ற வகையில் அந்நிறுவனம் குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்:-

Tags : #EGG #CHILDREN