கோழி முட்டை என்ன 'இப்டி' ஒரு கலர்ல இருக்கு?... தெரிஞ்சுக்கலனா 'தலையே' வெடிச்சிரும் போல!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 22, 2020 08:03 PM

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒத்துக்குங்கல் நகரை சேர்ந்த நபர் ஒருவரின் சிறிய கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன.

Hen lays eggs with different Colours in Kerala

முன்னதாக, சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் ஷிஹாபுதீன் கோழிப்பண்ணையில் இதே போன்று கோழி ஒன்று பச்சை மஞ்சள் கரு இருப்பதைக் கண்டறிந்த நிலையில், அது பாதுகாப்பானதா இல்லையா என்ற சந்தேகத்தில் அவர் குடும்பத்தினர் யாரும் அந்த முட்டையை சாப்பிடவில்லை. இந்நிலையில் அந்த கோழி போட்ட முட்டைகளை குஞ்சு பொறித்த நிலையில், அதில் இருந்து உருவான கோழிகளும் தற்போது பச்சை கரு முட்டைகளை இட ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், பச்சை முட்டை வைரலானது. இதனையடுத்து நாடு முழுவதிலும் இருந்து பல மக்கள் ஷிஹாபுதீனை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஷிஹாபுதீன் கூறுகையில், 'பச்சை கரு முட்டை தொடர்பாக சில புகைப்படங்களை நான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன். அதனைத் தொடர்ந்து பலர் பச்சை முட்டைக்காக என்னை அணுகத் தொடங்கினர். இப்போது நான் அவற்றை குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கிறேன். விஞ்ஞானிகள் சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும் போது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறினர். இருப்பினும், இந்த கோழிகளுக்கு நான் எந்த சிறப்பு உணவையும் கொடுக்கவில்லை' என்று அவர் கூறினார்.

பச்சை முட்டைக்கு பின்னணியிலுள்ள காரணத்தை கண்டறிய இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், 'நாங்கள் பல்கலைக்கழகத்தில் வளரும் கோழிகளைக் கவனிப்போம். மூன்று வாரங்களுக்குப் பிறகு, கோழிகள் வெள்ளை முட்டையிட்டால், கோழிகள் பண்ணையில் ஏதாவது சிறப்பு சாப்பிடுகின்றன என்பதை உறுதிப்படுத்த முடியும். மூன்று வாரங்களுக்குப் பிறகும் கோழிகள் பச்சை முட்டையிட்டால், எங்களுக்கு கிடைக்கும் இந்த நிகழ்வின் பின்னணியில் சரியான காரணத்தைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும்' என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hen lays eggs with different Colours in Kerala | India News.