‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’!.. ‘ஷாக் ஆன கணவன்’!.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 22, 2019 12:04 PM

கன்னியாகுமரியில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari woman send message through whatsapp her husband

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (26). இவருக்கும் மேல கருப்புக்கோடு பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ (23) பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவி வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தேட ஆரம்பித்துள்ளார். அந்த சமயம் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.

அதில் அவரது மனைவி,  ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேடி போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்ரீ தனது வீட்டின் அருகில் உள்ள சந்தோஷ் என்ற இளைஞருடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது ஒரே மகன் இப்படி செய்துவிட்டானே என்ற விரக்தியில் சந்தோஷின் தந்தை ஜெகதீசன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜெகதீசனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சந்தோஷ் மற்றும் ராஜஸ்ரீ எங்கு இருக்கிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #POLICE #SUICIDEATTEMPT #LOVE #MARRIAGE #KANYAKUMARI