'பொல்லாத ஆளு சார்.. இந்த பொல்லார்டு'.. 'என்னா ஒரு வில்லத்தனம்'.. 'வேற லெவல் சமயோஜிதம்' .. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Nov 12, 2019 07:18 PM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்கிற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஒவரில் 249 ரன்கள் அடித்ததைத் தொடர்ந்து 250 ரன்கள் என்கிற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர் ஷாய் ஹோப் கடைசி வரை களத்தில் நின்று ஆடி, சதமடித்ததால் இந்த இலக்கினை அந்த அணி எட்டியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு அவர் காரணமாக இருந்தார்.
இப்போட்டியின் 5வது ஓவரின் முதல் பந்தை பொல்லார்டு வீசும்போது, க்ரீஸை தாண்டி காலை வைத்துவிட்டார். இதனால் அம்பயர் நோ பால் கொடுப்பதற்கா தயாரானார். ஆனால் அதற்குள் அம்பயரின் கை அசைவுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ட பொல்லாத பொல்லார்டு, உடனே தன் வியூகத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். ஆம், அவர் அந்த பந்தை வீசவே இல்லை.
Pollard😂 pic.twitter.com/1ncUxUZamE
— RedBall_Cricket (@RedBall_Cricket) November 11, 2019
இதனால் அம்பயர் அந்த பால், டெட் பால் என அறிவிக்கவேண்டியதாயிற்று. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
