'ஜூனியர் உலகக் கோப்பை'... 'முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு'... 'கிலியை உண்டாக்கிய’... ‘சின்னப் பையன்’... ‘சந்தோஷத்தில் குதிக்கும் ஐபிஎல் அணி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 28, 2020 09:01 PM

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.

U19CWC:IND V AUS: Kartik Tyagi Dismisses Aus Batsman

U19 எனப்படும் 19 வயது உட்பட்டோர்களுக்கான உலகக் கோப்பை போட்டி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கடந்த 17-ந் தேதி முதல் நடந்து வருகிறது. 16 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது கால் இறுதிப் போட்டி நடைப்பெற்று வருகிறது. போட்செஸ்ட்ரூமில் இன்று நடைபெறும் முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாஷ்வி ஜெய்ஸ்வால், 82 பந்துகளில், 62 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதேப்போல், அதர்வா அங்கோல்கர் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 233 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் பேனிங் மற்றும் ஃபிரேசர் மெக்குர்க் களமிறங்கினர். முதல் பந்தை இந்திய அணியின் கார்த்திங் தியாகி வீசினார். அப்போது ரன் எடுக்க ஓடியபோது, முதல் பந்திலேயே மெக்குர்க் ரன் அவுட் ஆகினார். கிட்டத்தட்ட முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை, கார்த்திக் தியாகியிடம் பறிகொடுத்தது. 3-வது ஓவரிலும் கார்த்திக் தியாகி விக்கெட் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில், 37 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் தொடக்க ஆட்டக்காரரான சாம் பேனிங் நிதானமாக ஆடி 50 ரன்கள் சேர்த்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவரில் 159 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. 24 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கார்த்திக் தியாகி, தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல் அணியின் வெற்றிக்கு அதிக ரன்கள் சேர்த்த யாஷ்வி ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : #RAJASTHAN-ROYALS #BCCI #WORLD CUP #U19 #KARTIK TYAGI #YASHVI JAISWAL