பெற்றோரை எதிர்த்து 'காதல்' திருமணம்.. 11 நாட்களில்.. பெண் என்ஜினியர் 'தூக்கிட்டு' தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 06, 2019 12:51 AM

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட பெண் என்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newly wed-techie hills self in Hyderabad, Police Investigate

ஹைதராபாத் சனாத்நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா(22) என்னும் பெண் என்ஜினியர் திருமணமான 11 நாட்களில் (கடந்த செவ்வாய்க்கிழமை) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பூர்ணிமாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பூர்ணிமாவின் காதல் கணவர் கார்த்திக் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், '' பூர்ணிமா ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் கார்த்திக் என்பவரை வீட்டை எதிர்த்து கடந்த 22-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் கார்த்திக்-பூர்ணிமா இருவரும் சனாத்நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை இரவு கார்த்திக்கின் பிறந்தநாளை பூர்ணிமா கார்த்திக்கின் அப்பா-அம்மாவுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். செவ்வாய்க்கிழமை கார்த்திக்கின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேறி விட்டனர். அன்று மாலை பூர்ணிமா வீட்டில் இருந்த சீலிங் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

பூர்ணிமா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தில் தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி தாயிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பூர்ணிமாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கிடம் தற்போது விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலையா?  குறித்து தெரியவரும்,'' என்று தெரிவித்து உள்ளனர்.