25 பைசாவுக்கு '1/2 பிளேட்' பிரியாணி.. 5,10 பைசாவுக்கு 'சேலை'.. கட்டுக்கடங்காத கூட்டம்.. கடைமுன் குவிந்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 03, 2019 12:56 PM

சமீபகாலமாக புதிதாக கடை திறப்பவர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து பொதுமக்களை கவர்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் திண்டுக்கல்லில் 5 பைசாவுக்கு 1/2 பிளேட் பிரியாணி கொடுத்தனர். இதனால் அந்த கடைக்குமுன் ஏராளமான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர்.

Chicken Biryani sold for 25 paise in Vellore, details here

இந்தநிலையில் நேற்று வேலூரில் உள்ள ஆர்.ஆர் உணவகத்தின் உரிமையாளர் புதிய ஹோட்டல் ஒன்றை திறந்தார். அதற்கு விளம்பரம் செய்வது போல 25 பைசா கொடுத்து பிரியாணி வாங்கி செல்லலாம் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடைமுன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

மக்கள் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடைசியில் போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்கு செய்தனர். ஏற்கனவே அறிவித்தது போல 25 பைசா கொடுத்த முதல் 200 பேருக்கு 1/2 பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது.  இதேபோல வாணியம்பாடி பகுதியில் புதிய துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது.

'இதை முன்னிட்டு பழைய 5,10 பைசா கொண்டு வரும் நபர்களுக்கு 250 மதிப்புள்ள புதிய புடவை வழங்கப்படும் என அறிவித்தனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் கடைமுன் திரண்டனர். கட்டுப்படுத்த முடியாமல் பொதுமக்கள் திரண்டதால் முதலில் வந்த 100 பேருக்கு மட்டும் 250 மதிப்புள்ள புடவை வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புகளால் வேலூர் நகரமே நேற்று பரபரப்பாக காணப்பட்டது. 

Tags : #POLICE