ஹலோ கஸ்டமர் கேரா?.. 24000 கால்கள்.. 'ஓவர்' டார்ச்சர்.. முதியவரை 'கைது' செய்த காவல்துறை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Dec 04, 2019 01:26 PM

கஸ்டமர் கேருக்கு சுமார் 24000 முறை கால் செய்து டார்ச்சர் செய்த முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது.

71-year-old Japan man arrested for making 24,000 complaint calls

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் எகித்தோஷி ஒஹாமோடோ(71). ஓய்வுக்குப்பின் பென்ஷன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார். ஜப்பானின் நாட்டின் கேடிடிஐ என்ற நிறுவனத்தின் சிம்கார்டை பயன்படுத்தி வரும் இவர் கடந்த அக்டோபர்  மாதம் மட்டும் ஒரே வாரத்தில் 411 முறை கஸ்டமர் கேருக்கு கால் செய்துள்ளார். போனில் இவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சந்தேகத்தைக் கேட்பார். பல சமயம் ஏற்கனவே கேட்ட சந்தேகங்களையும் கேட்பார்.

இவரால் கடுப்பான ஊழியர்கள் மேலிடத்தில் புகார் செய்ய அவர்கள் அந்த எண்ணில் இருந்து எவ்வளவு கால்கள் வந்துள்ளன என்று சோதனை செய்துள்ளனர். அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 24000 முறை அவரிடம் இருந்து கால் வந்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 33 முறை கால் செய்துள்ளார். இதனால் அதிர்ந்து போன சிம் நிறுவனம் அவரது கால்களை கஸ்டமர்கேர் நம்பருடன் கனெக்ட் ஆகவிடாமல் கட் செய்தது.

இதனால் ஆத்திரமடைந்த எகித்தோஷி ஒஹாமோடோ வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்து இப்படி தன் நம்பர் மட்டும் கட் செய்யப்பட்டதை சொல்லி அந்நிறுவனத்திடம் தன்னிடம் வந்து மன்னிப்பு கோர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிம்கார்டு நிறுவனம் அவர் மீது போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் சிம்கார்டு நிறுவனம் தனக்கு சரியான சேவை வழங்கவில்லை என எகித்தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags : #POLICE