'இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா?'.. 'செல்போன் கடை' ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 05, 2019 10:55 AM

சீரூடையில் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள செல்போன் ஷோரூமுக்கு சென்றுள்ளார் காவலர் ராஜபாண்டி.

Police man suspended after he assaults cellphone shop owner

அங்குள்ள கடை ஒன்றில் ஹெட்போன் விலை குறித்து கேட்ட காவலர் ராஜபாண்டியிடம், அந்த கடை ஓனர் கூறிய விலை, ஆன்லைன் விலையை விட மிகவும் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் காவலர் ராஜபாண்டி கடை ஓனருடன் விவாதித்துள்ளார். 

இதில் இருதரப்புக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் ஆயிரம் விளக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி, கடை ஓணரைத் தாக்கியதாக சிசிடிவி காட்சிகளில் பதிவான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags : #POLICE #HEADPHONE #PUBLIC