'செம' ஷாக்... ஹைதராபாத் வன்புணர்வு வீடியோ கெடைக்குமா?.. கூகுளையே அதிரவைத்த தேடல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 03, 2019 04:52 PM

கடந்த வாரம் ஹைதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Indians Searched Hyderabad Gang Rape Video On Google

குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என, நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. லட்சக்கணக்கான பேர் இதனை வலியுறுத்தி கையொப்பம் இட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீர்ரகள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

மறுபுறம் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ கிடைக்குமா? என்று கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய கொடுமையும் நடந்துள்ளது. இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள டேட்டா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பாலும் ஹைதராபாத் ரேப் வீடியோ, ஹைதராபாத் கேங் ரேப் வீடியோ போன்ற கீவேர்டுகளை பயன்படுத்தி பெண் மருத்துவரின் வீடியோவை தேடியுள்ளனர்.

இதற்கு முன் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது இதேபோல அந்த சிறுமியின் வீடியோக்களை அதிகளவில் இந்தியர்கள் தேடியது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் நமது இந்திய சமூகத்தின் தற்போதைய நிலை மற்றும் பலரின் மோசமான மனநிலையை  பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.