'வீட்ல' சமைக்காம.. ஏன் ஹோட்டல்ல 'சாப்பாடு' வாங்குற?.. ஆத்திரத்தில் 'கணவர்' செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 05, 2019 10:03 PM

இன்றைய உலகில் நின்று, நிதானமாக சமைக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் உணவை ஆர்டர் செய்வது, ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவது வாடிக்கையாகி விட்டது.

Husband killed wife for not cooking home, in Velachery

இந்தநிலையில் மனைவி சமைக்கவில்லை என்பதால் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரி பகுதியில் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(24) இவரது மனைவி இலக்கியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

ஜெயராஜ் கார் டிரைவராகவும், இலக்கியா சென்னையின் பிரபல மால் ஒன்றிலும் பணியாற்றி வந்துள்ளார். இரவு வேலை முடிந்து அசதியில் வருவதால் இலக்கியா பெரும்பாலான நேரங்களில் உணவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 1-ம் தேதி  ஜெயராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். வீட்டில் இலக்கியா தூக்கில் தொங்கியுள்ளார். விசாரித்த அக்கம் பக்கத்தினரிடம் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம். நான் தூங்கியபின் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று ஜெயராஜ் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து போலீஸ்க்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து இலக்கியா மரணம் தொடர்பாக ஜெயராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இலக்கியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இலக்கியா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவரம் வெளியானது.

இதைத்தொடர்ந்து ஜெயராஜிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், ஜெயராஜ் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புலால் சிறையில் அடைத்தனர். சமைக்காததால் மனைவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.