‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’!.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 05, 2019 01:21 PM

குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra woman killed her drunkard husband

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியை சேர்ந்தவர் அனுஷ்க் சவான் (45). இவருக்கு ஷோபா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அனுஷ்க் சவானுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவதன்று அனுஷ்க் சவான் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது தனது இளையமகன் உதவியுடன் கணவர் கழுத்தை துப்பட்டாவால் ஷோபா இறுக்கி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அதிகமான குடிபோதையில் கணவர் இறந்தததுபோல் காண்பிப்பதற்காக உடலை வீட்டு வாசலில் போட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது பிரேத பரிசோதனையில் அனுஷ்க் சவான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோபாவிடம் நடத்திய விசாரணையில், இளையமகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #POLICE #MAHARASHTRA #WOMAN #HUSBAND