அடுத்த 6 மாசத்துக்குள்ள.. 'மெரினா' பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 06, 2019 12:20 AM
உலகின் மிக நீளமான 2-வது கடற்கரையான மெரினா சுற்றுலாவாசிகள் மத்தியிலும் மிகுந்த பிரபலம். சென்னை மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் சென்னைக்கு விசிட் அடித்து மெரினாவை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் விடுமுறை மட்டுமின்றி வார நாட்களிலும் மெரினா பரபரப்புடனேயே காணப்படும்.

இந்தநிலையில் மெரினாவில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும். மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
