ஹலோ போலீசா?.. நான் படிக்கணும்.. என் கல்யாணத்தை 'தடுத்து' நிறுத்துங்க.. 'அதிரவைத்த' 11 வயது சிறுமி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 04, 2019 12:24 PM
தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு போலீஸ்க்கு 11 வயது சிறுமி போன் செய்த சம்பவம் உத்தர பிரேதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவே மாவட்டம் பிகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ்பன் நிஷாத். இவரது 11 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வரும் லட்சுமி தேவி. சிறுமியை 28 வயதான ரோகித் நிஷாத் என்பவருக்கு வரும் டிசம்பர் 10-ம்தேதி திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை சூரஜ்பன் நிஷாத் மும்முரமாக செய்து கொண்டிருந்தார்.
தனக்கு திருமணம் வேண்டாம் என்று லட்சுமி தேவி எவ்வளவோ எடுத்து கூறியும் அவரது தந்தை அதை கேட்பதாக இல்லை. இதைத்தொடர்ந்து 112 என்ற எண்ணுக்கு கால் செய்த சிறுமி தன்னுடைய நிலையை எடுத்துக்கூறி, திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை இணைந்து, சிறுமி லட்சுமியை திருமணத்திலிருந்து காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் சிறுமியின் தந்தைக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகள் லட்சுமியை தொடர்ந்து படிக்க வைக்க கூறினர் இதனை ஏற்ற சூரஜ்பன் சிறுமியை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டாரர். இதனை அடுத்து அவரையும், லட்சுமி ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறாரா என்பதை கண்காணிக்கவும் காவலர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சிறுமி தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரவ, அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.