‘2-வது மனைவியுடன் சொகுசு வாழ்க்கை’.. ‘3 மாதத்தில் 30 பைக்குகள்’.. அதிரவைத்த திருச்சி திருடன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 04, 2019 12:38 PM

இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வதற்காக பைக்குகளை திருடி வந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Man attested by police for bike theft case in Trichy

திருச்சி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளன. இருசக்கர வாகனங்கள் தொலைந்துபோன வழக்குகள் தொடர்ந்து வந்ததால் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்த அகஸ்டின் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் திருச்சி பெல் தொழிற்சாலை, திருவெறும்பூர், துவாக்குடி, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி, பழைய இரும்புக் கடைகளில் விற்று வந்தது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை தனது இரண்டாவது மனைவியிடம் கொடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக அகஸ்டின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 15 லட்சம் மதிப்புள்ள 30 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்களை திருடியுள்ளார். இவர் மீது ஏற்கனவே வாகனங்களை திருடிய வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அகஸ்டினை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News & Photo Credits: Vikatan

Tags : #ROBBERY #POLICE #TAMILNADUPOLICE #TRICHY #ATTESTED #BIKE