'நைட்டு' 12 மணிக்கு மேல.. சூடா 'தோசையும்' பீப்பும் எங்க கெடைக்கும்?.. போலீசை 'வம்பிழுத்த' இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 04, 2019 11:52 PM
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ் (Kanyakumari District Police) என்ற பேஸ்புக் பக்கம் இயங்கி வருகிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து இந்த பேஸ்புக் பக்கம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பேஸ்புக் பக்கத்தில் காவல்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றன. இதனால் அதிர்ந்து போன போலீசார் இதுகுறித்து விசாரித்த வந்தனர். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அவதூறான கருத்துக்கள் போஸ்டுகளுக்கு கீழ் இடம்பெற்று இருந்தன.
இதனால் வல்லுநர்களை வைத்து பேஸ்புக்கை மீட்ட காவல்துறை அவதூறு கருத்துகளை பதிவிட்டு போலீஸ் பேஸ்புக் பக்கத்தை முடக்கியவர்கள் குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங், மார்சியன் ஆன்றணி ஆகியோர் தான் என்பதை கண்டுபிடித்தனர். இவர்கள் நால்வரும் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
பேஸ்புக் கமெண்டில்,'' கன்னியாகுமரி டிஸ்டிரிக்ட் போலீஸ் சார் ராத்திரி 12 மணிக்கு மேல சூடா தோசையும், பீப் கறியும் எங்க கிடைக்கும் என அனு டியர் கேட்க சொன்னான்,'' என்பது போன்ற கிண்டல், கேலி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் விடுமுறையில் ஊருக்கு வந்த ஜெரூன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை கண்டித்து நிபந்தனை ஜாமீனில் வெளியில் விட்டனர். தொடர்ந்து மேலும் மூவரையும் கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.