பொண்ணுங்களுக்கு மட்டும் தான் .. உங்களுக்கு என்ன தோணுதோ செய்யலாம்?.. ஹைதராபாத் போலீசை 'விளாசும்' நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 02, 2019 11:00 PM

பிரியங்கா ரெட்டியின் மரணம் இந்தியளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என, மக்கள் ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Twitter Slams Hyderabad Police for their women safety formula

இந்தநிலையில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என ஹைதராபாத் போலீசார் 14 அறிவுரைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பெண்களுக்கு இவ்வளவு அறிவுரைகள் சொல்லும் நீங்கள் பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டாம்? என ஆண்களுக்கு ஏன் சொல்லவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் ட்விட்டரில் தற்போது #hyderabadpolice என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஹைதராபாத் போலீசாரின் அறிவுரைகள் இதுதான்.

1. அறிமுகம் இல்லாத இடத்திற்கு சென்றால் அந்த இடம் பற்றி செல்லும் பாதை பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

2. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருந்தால் அருகில் உள்ள கடை அல்லது நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்லுங்கள்.

3. எப்போதும் நெரிசல் மிகுந்த, ஒளிரும் பகுதிகளில் காத்திருங்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களை தவிர்க்கவும். போலீஸ் ஜீப்கள், வண்டிகள் சிக்னல் கொடுத்தால் தயங்க வேண்டாம். அவை உங்கள் பாதுகாப்பு அளிக்கும்.

4. வெளியில் செல்லும்போது எங்கு செல்கிறீர்கள், என்ற விவரங்களை உங்கள் வீட்டினரிடம்,நண்பரிடம் சொல்லி செல்லுங்கள்.

5. உங்களுக்கு உதவி தேவை என்றால் 100-க்கு டயல் செய்யுங்கள்.

6. ஆட்டோ அல்லது டாக்சியில் பயணம் செய்தால் வண்டி எண், தொடர்பு எண்களை பகிருங்கள்.

7. தெலுங்கானா போலீசின் ஹாக்-ஐ ஆப்பை டவுன்லோட் செய்து அதில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

8. உங்களுக்கு பிரச்சினை என்றால் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உதவி கேட்க தயங்க வேண்டாம்.

9. பயணிகள் அல்லது வழிப்போக்கர்கள் யாரும் இல்லையென்றால், உங்கள் உறவினருடன் காவல்துறையில் பேசுவதைப் போல நடந்து கொள்ளுங்கள், மேலும் இடம் மற்றும் வாகனங்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள், இது அவர்களை பயமுறுத்தும்.

10. நம்பிக்கையுடன் இருங்கள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சத்தமாக பேசுங்கள். தேவைப்பட்டால் உதவிக்காக கத்துங்கள்.

இதேபோல இன்னும் அறிவுரைகள் நீளுகின்றன. இதைப்பார்த்த பெண்கள் இதை எல்லாம் நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஆண்களுக்கு நீங்கள் ஏன் எந்த அறிவுரையும் சொல்லவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளனர்.