‘போன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டா’!.. ‘பழிவாங்கதான் அதை செஞ்சேன்’.. காதலனின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 03, 2019 01:34 PM

தன்னுடன் பேசுவதை தவிர்த்ததற்காக காதலியின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாக காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tirupur youth arrested by police over sexual abuse case

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சமயத்தில் தன்னுடன் பள்ளியில் படித்த 19 வயது பெண்ணை எதர்ச்சையாக சூலூரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் செல்போன் நம்பர்களை பகிர்ந்து பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பெண், தனது வீடியோக்களை அஜித்குமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து அஜித்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்த போலீசாரிடம் தெரிவித்த அஜித்குமார், நான் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவியை சந்திதேன். அதன்பின் இருவரும் காதலித்தோம். அவள் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறாள். இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப் காலில் பேசி வந்தோம். அந்த வீடியோக்களை எனது போனிலும், லேப்டாப்பிலும் சேமித்து வைத்திருந்தேன்.

திடீரென என்னுடன் பேசுவதை அவள் தவிர்த்தாள். பல தடவை போன் செய்தும் எடுக்கவில்லை. என்னுடைய போன் நம்பரையும் ப்ளாக் செய்துவிட்டாள். இதனால் அவளுடன் பேசமுடியவில்லை. நேரில் சென்று பேசினாலும் பேசாமல் சென்றுவிட்டாள். இதனால் பழிவாங்குவதற்காக அவளுடைய வீடியோக்களை என்னுடைய பேஸ்புக்கிலும் அவளுடைய உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பினேன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோக்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : #SEXUALABUSE #POLICE #TIRUPUR #ARRESTED