3 பேருடன் சேர்ந்து.. 'இளம்பெண்ணை' காரில் கடத்தி... வன்புணர்வு செய்த போலீஸ்காரர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 03, 2019 12:01 AM

காரில் லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி அழைத்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள், அந்த பெண்ணை வன்புணர்வு செய்த கொடூரம் ஒடிசாவில் நடந்துள்ளது.

Girl Gang Raped By 2 Including ‘Dismissed Cop’ In Odisha

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகார் கடிதத்தில், '' நான் புவனேஸ்வரில் இருந்து என்னுடைய ஊரான ககத்பூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். இடையில் உணவு சாப்பிட இறங்கியபோது பேருந்தை தவறவிட்டு விட்டேன். இதனால் பேருந்துக்காக நான் நிமாபாரா பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் லிப்ட் தருவதாக கூறினார்.

அவர் போலீஸ் அடையாள அட்டையை காட்டினார், எனினும் காரில் மேலும் 3 பேர் இருந்ததால் நான் வேண்டாம் என்று மறுத்தேன். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, பூரி டவுனில் உள்ள போலீஸ் குவார்ட்டர்ஸ்க்கு அழைத்து சென்றனர். அங்கு என்னை ஒரு வீட்டிற்குள் வைத்து வெளியில் பூட்டி விட்டனர். இரண்டு பேர் வெளியில் நிற்க, இருவர் வீட்டிற்குள் இருந்தனர்.

போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டவரும், இன்னொருவரும் என்னை வன்புணர்வு செய்தனர். அவர்கள் குடித்துவிட்டு தூங்கியபோது நான் அவர்களில் ஒருவரின் பர்ஸை எடுத்து, அதில் உள்ள பணத்தை வைத்து வெளியில் ஒருவரிடம் உதவி கேட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்தேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

பர்ஸில் இருந்த அடையாள அட்டையை  வைத்து இருவரில் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் ஜிதேந்திர சோதி என்பதை போலீசார் கண்டறிந்தனர் . 

தற்போது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து  விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் போலீசே பெண்ணை வன்புணர்வு செய்த கொடுமை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது..