நீண்டநாள் ஸ்கெட்ச்.. விஷப்பாம்பை 'விலைக்கு' வாங்கி.. மனைவியை கொன்று.. 'நாடகம்' ஆடிய கணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 04, 2019 11:25 PM

மனைவியை கொன்றுவிட்டு அவர் பாம்பு கடித்து இறந்ததாக நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Man strangles wife to death, attempts to pass off crime as snake bite

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அமிதேஷ் பட்டாரியா(36) இவருக்கு ஷிவானி(35) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் மனைவி பாம்பு கடித்து இறந்து விட்டதாக அமிதேஷ் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து உள்ளார். இதனை அனைவரும் நம்பிய நிலையில் போலீஸ் விசாரணையில் அமிதேஷ் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் மனைவியை கொல்ல திட்டம் தீட்டிய அமிதேஷ் பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வீட்டிற்குள் விட்டுள்ளார். சம்பவ தினத்தன்று தன்னுடைய தந்தை, சகோதரியிடம் திட்டம் குறித்து கூறி அவர்களை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பி விட்டார்.

தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியை தலையணை வைத்து அமுக்கி கொன்றுவிட்டு வாங்கி வைத்திருந்த பாம்பை அவர் கையில் கடிக்க விட்டுள்ளார். அவர் இறந்தவுடன் மனைவியை பாம்பு கடித்து விட்டதாக அருகில் இருந்த மருத்துவமனையில் மனைவியை சேர்த்துள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷிவானி மூச்சுத்திணறி இறந்த விவரம் வெளியாகி விட்டது.

தற்போது இதுதொடர்பாக அமிதேஷ் அவரது தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.