முதல் நாளே அட்டூழியம்!.. மது போதையில் கார்-ஐ தலைகுப்புற கவிழ்த்திய இளைஞர்கள்!.. பொதுமக்கள் கொந்தளிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அருகே மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர்கள், ஏற்படுத்திய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.
கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கிச்சென்றனர். ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வடவள்ளியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டிய நிலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதேபோல திருப்பூர் கல்லூரி சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் சென்றவர்களை திடீரென தாக்கினார்.
இதை அடுத்து, பொதுமக்கள் சேர்ந்து போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், தகவல் கிடைத்தன் பெயரில் வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.