'சென்னையை' பொறுத்தவரை 'இங்க' தான் பாதிப்பு அதிகம்... ஆனாலும் 'சாயங்காலமானா' ஆரம்பிச்சிடுறாங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 01, 2020 04:33 AM

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா பாதிப்புகளில் சுமார் 50% அதிகமான பேர் சென்னையில் உள்ளனர். தேசியளவிலும் கொரோனா அதிகம் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.

Coronavirus: Royapuram is the most affected area in Chennai

குறிப்பாக ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் சென்னையில் உள்ள மொத்த பாதிப்பில் 85 சதவீதம் பேர் உள்ளனர். இதில் திரு.வி.க நகர் மண்டலத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், திரு.வி.க. நகர், பெரவள்ளுர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த நிலையில் ராயபுரம், புளியந்தோப்பு பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், கொரோனாவை கட்டுக்குள் வைப்பதும் மிகுந்த சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். 6.39 லட்சம் மக்கள் வசிக்கும் ராயபுரத்தில் இதுவரை 189 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் மக்கள் மிகவும் நெருக்கமாக வசித்து வருவதாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அதிலும் கூட்டமாக மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவது, கேரம்போர்டு-செஸ் விளையாடுவது என பொழுதை போக்கி வருகின்றனராம். போலீசார் எச்சரித்தாலும் அப்போது எழுந்து சென்றுவிட்டு மீண்டும் அதே இடத்தில் ஆட்டத்தை கண்டினியூ செய்ய ஆரம்பித்து விடுகிறார்களாம். இதனால் அதிகாரிகளுக்கு இப்பகுதியில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது மிகுந்த சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.