1. பூமியின் நீள் வட்டப்பாதையை, பிரம்மாண்ட விண்கல் ஒன்று நாளை கடக்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
2. சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 121 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
3. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்து இருக்கிறது.
4. தமிழகத்தில் இதுவரை நீலகிரி, ஈரோடு ஆகிய 2 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன. இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
5. தமிழகம் முழுவதும் இதுவரை 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். அதே நேரம் 1128 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
6. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மும்பை காவலர் ஒருவரை போலீசார் கைதட்டி வரவேற்ற நிகழ்வு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
7. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழச் சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8. தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
9. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்குகிறது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
10. ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்த பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து இருக்கிறார்.