‘பிறவியிலே வாய் பேச, நடக்க முடியாத சிறுவன்’.. விஜய் பட ‘பஞ்ச் டயலாக்’ வைத்து சிகிச்சை..! கேரளாவில் நடந்த அதிசயம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 05, 2019 05:42 PM

வாய் பேச முடியாத குழந்தைக்கு நடிகர் விஜய் பட வசனங்களை கூறி சிகிச்சை அளித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay movie punch dialogues cure disabled boy in kerala

கேரளா மாநிலம் இடுக்கியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறந்ததில் இருந்து நடக்க மற்றும் வாய் பேச முடியாமல் இருந்துள்ளார். இதனால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு மருத்துவர்களை அணுகிவந்துள்ளனர். இந்நிலையில் இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் சிறுவனை அனுமதித்துள்ளனர். அப்போது கத்தி திரைப்படத்தில் உள்ள ‘செல்ஃபி புள்ள’ ரிங்டோனை கேட்ட சிறுவனுக்கு அசைவுகள் ஏற்படுவதை மருவத்துவர்கள் கவனித்துள்ளனர்.

இதனை அடுத்து விஜய் படங்களை ஒளிபரப்பும் போதேல்லாம் சிறுவனிடம் மாற்றத்தை கண்டுள்ளனர். இதனால் விஜய் படத்தின் பஞ்ச் வசனங்களையும், நடன காட்சிகளையும் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது செபாஸ்டியன் நடக்கவும், ஓரளவுக்கு பேசவும் செய்வதாக சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை வைத்து வாய் பேச முடியாத சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VIJAY #KERALA #DIALOGUES