‘சினிமா’ பாணியில் ‘5 நிமிடங்களுக்கு’ முன் வந்த போலீஸார்.. ‘தாலி’ கட்டப்போகும் நேரத்தில் சிக்கிய ‘மணமகன்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 09, 2019 07:22 PM

ஆந்திராவில் தாலி கட்டுவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Andhra Groom Arrested Minutes Before Marriage For Cheating A Girl

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை செய்து வருபவர் மோகன கிருஷ்ணா. இவருக்கும் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்தன்று சினிமா பாணியில் தாலி கட்டுவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக கோயிலுக்கு வந்த போலீஸார் மோகன கிருஷ்ணாவிடம் சென்று, உங்கள் மீது புகார் வந்துள்ளது எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும் எதுவாக இருந்தாலும் தாலி கட்டிய பின் நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியுள்ளனர். அதை ஏற்காத போலீஸார், “மோகன கிருஷ்ணாவிற்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அதை மறைத்து அவர் தற்போது திருமணம் செய்யப்போவதாக எங்களுக்கு ஆதாரத்துடன் புகார் வந்துள்ளது” எனக் கூறி அவரைக் கைது செய்துள்ளனர். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, பெண் வீட்டார் கடைசி நிமிடத்தில் தப்பித்தோம் என அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “மணமகன் மோகன கிருஷ்ணா ஏற்கெனவே இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அந்தப் பெண்ணின் வீட்டாரிடமிருந்து 12 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 8 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கியுள்ளார். ஆனால் தற்போது அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் வேறு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக எங்களுக்கு புகார் கிடைத்தது. அதனடிப்படையில் நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #MONEY #ANDHRA #MARRIAGE #FRAUD #GROOM #BANK #MANAGER #POLICE