VIDEO: ‘கையில் வீச்சரிவாள்’! ‘நடுரோட்டில் பேருந்தை மறித்து மிரட்டல்’! பீதியை ஏற்படுத்திய இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 10, 2019 03:19 PM
கரூர் அருகே அரிவாளுடன் நடுரோட்டில் நின்று இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சாலையில் இளைஞர் அரிவாளுடன் சுற்றித்திரிந்தார். அப்போது அந்த வழியாக வந்த பேருந்துகளை தடுத்து நிறுத்தி அரிவாளைக் காட்டி ஆவேசமாக பேசினார்.
சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக சாலையில் அங்குமிங்கும் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து போலீசார் அங்கே வருவதற்குள் இளைஞரின் உறவினர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #KARUR #YOUTH #KNIFE #VIRALVIDEO
