‘யூடியூப் மூலம் ஒரே வருஷத்தில் ரூ.185 கோடி வருமானம்’!.. ஆச்சரியத்தில் உறைய வைத்த 8 வயது சிறுவன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Dec 20, 2019 09:47 AM
யூடியூப் மூலம் அதிக சம்பாதித்தவர்களின் பட்டியலில் 8 வயது சிறுவன் ரியன் காஜி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
![8 year old earned Rs 185 crores this year on YouTube 8 year old earned Rs 185 crores this year on YouTube](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/8-year-old-earned-rs-185-crores-this-year-on-youtube.jpg)
அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் யூடியூப் சேனல் மூலம் 2019-ம் ஆண்டில் 185 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ரியான்ஸ் வேல்ர்ட் (Ryan's World) என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது. தற்போது அந்த சேனலை 2.2 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இந்த சேனலில் விளையாட்டு பொருட்களை பயன்படுத்துவது குறித்து ரியான் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு யூடியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டியவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரியான் காஜி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டும் 22 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்து ரியான் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)