‘எலும்புக்கூடாக’ கிடைத்த பெண்.. ‘ஒரு மாதம் கழித்து’ சிக்கிய காதலன்.. ‘அதிர வைக்கும்’ வாக்குமூலம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 10, 2019 12:23 PM

ராமநாதபுரத்தில் தகாத உறவால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ramanathapuram Woman Murdered By Lover Over Affair Issue

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அமலசெல்வி (40). கணவரைப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்த அவர் கடந்த மாதம் 8ஆம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அமலசெல்வியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர் சித்தானூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது. பின்னர் போலீஸார் கண்ணனைப் பிடித்து விசாரித்ததில் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

போலீஸாரிடம் கண்ணன் கொடுத்த வாக்குமூலத்தில், அமலசெல்விக்கும் தனக்கும் தகாத உறவு இருந்துவந்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் அவரைக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இருவருக்கும் பழக்கம் இருந்துவந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அமலசெல்வி அவருடன் பழகுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த கண்ணன் சம்பவத்தன்று போன் செய்து அமலசெல்வியை தேவகோட்டைக்கு வருமாறு அழைத்துள்ளார். கடைசியாக ஒருமுறை அவருடன் இருக்க வேண்டுமெனக் கூறிய கண்ணன் காட்டுப்பகுதியில் இருவரும் தனிமையில் இருந்தபோது, அமலசெல்வியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின் அவருடைய உடலை அங்கேயே போட்டுவிட்டு அவர் திரும்பியுள்ளார். கண்ணன் கூறிய தகவலின் அடிப்படையில் காட்டுப்பகுதிக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து அமலசெல்வியின் எலும்புக்கூடு, மண்டை ஒடு, சேலை, தலைமுடி ஆகியவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்காக சேகரித்து வந்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #RAMANATHAPURAM #WOMAN #LOVER #AFFAIR #MARRIAGE