‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறை’.. ‘அசத்திய அரசு பள்ளி மாணவி’.. குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 05, 2019 12:54 PM

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் எளிய முறை ஒன்றை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

TN Govt School student find Borewell rescue new method

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் பக்கீர் முகமது. இவரது மகள் சமீரா. இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்தது. இதனைப் பார்த்த மாணவி சமீரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கும் எளிய முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கி இருக்கும் போது இரு காந்தங்களை குழந்தையின் பக்கவாட்டு பகுதி வழியே கீழே இறக்கி அவற்றை ஒன்றிணைக்கிறார். பின்னர் ஒருபுறமாக காந்தத்தை மேல் நோக்கி இழுத்து, அதன் வழியாக பட்டையான கயிறு ஒன்றை விட்டு மறுபுறம் இழுக்கும்போது குழந்தைக்கு கயிற்றில் அமர்ந்த நிலை ஏற்படுகிறது. அப்போது கயிற்றில் முடிச்சி போட்டி குழந்தையை லாவகமாக மேல இழுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் வீட்டில் இருந்த பயனற்ற பொருள்களை கொண்டே உருவாக்கியதாகவும், இதனை மேம்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக்கினால் 1000 ரூபாயில் செய்து முடிக்க முடியும் என சமீரா தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவி கண்டுபிடித்த இந்த எளிய முறைக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #SCHOOLSTUDENT #TAMILNADU #BOREWELL