'மூனே மூனு அடிதான்'.. 'நெனைச்சதெல்லாம் நடக்கும்'.. 'பூசாரி கையால் சாட்டையடி'.. விநோத திருவிழா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 05, 2019 11:14 AM
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதனைப் பொருத்து ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விசயத்தில் பிரசித்தி பெற்றதாக இருக்கும்.

அப்படித்தான் நாமக்கல் மாவட்டத்தில் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி பெற்றுக்கொள்வது ஐதீகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ள அத்திபலகானுர் மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் திருவிழாவில் பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வருதல், உருளுதண்டம் போடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து நோய் நொடியில்லா வாழ்க்கையையும், நினைத்தது நிறைவேறவும் பூசாரி கையால் 3 முறை சாட்டையால் அடி வாங்கும் நிகழ்வு நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாட்டையடி பெற்றுக்கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
Tags : #NAMAKKAL #TEMPLE
