'என்னையும் நம்ப வச்சு'... 'சுஜி டார்கெட் செய்த பெண்கள்'... 'லேப்டாப்பில் இருக்கும் மர்மம்'... தமிழகத்தையே உலுக்கும் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 29, 2020 01:11 AM

தமிழகத்தில் கொரோனாவிற்கு அடுத்தபடியாக பலரையும் அதிரவைத்துள்ள சம்பவம், பல பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்த காசி என்கிற சுஜியின் கைது தான். தற்போது பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

College Girl filed a Complaint against Nagercoil Suji

நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் காசி என்கிற சுஜி, இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்ததாக, சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக,  சுஜி தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சுஜி குறித்து நாள்தோறும் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதனிடையே சுஜியால் பாதிக்கப்பட்டவர்கள், தயங்காமல் புகாரளிக்கலாம் எனக் கூறிய குமரி மாவட்ட போலீஸார், அதற்கென செல்போன் நம்பர் ஒன்றையும் வெளியிட்டனர். இதையடுத்து அந்த எண்ணில் தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர், சுஜி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி நகைகள், பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன்பேரில் சுஜி மீது புதியதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுஜியுடன் பழகிய பெண்களை அவர்களுக்குத் தெரியாமல், சுஜி எடுத்த ஆபாச வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் செல்போன்கள், லேப்டாப்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, காவல்துறையின் வசம் வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட லேப்டாப், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து  சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் சுஜியின் லேப்டாப்பை ஓப்பன் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்து இன்னும் பல அதிரவைக்கும் தகவல்கள் காவல்துறையினருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சில பெண்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அதில் சில பேருக்கு திருமணமாகி இருக்கும் நிலையில், தங்களால் புகார் அளிக்க முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் சுஜியின் நண்பர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக  காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என கூறியிருந்த நிலையில், இளம் பெண் ஒருவர் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் இன்னும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.