‘நடுராத்திரி வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. ‘திடீரென உருட்டுக்கட்டையால் விழுந்த அடி’.. விவசாய தம்பதிக்கு நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாய தம்பதியிடம் ஒன்றரை லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அடுத்த திருக்கல்காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி-பருவதம் தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் இரவு வீட்டுக்குள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கதவை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
நள்ளிரவு வீட்டுக்குள் சத்தம் கேட்டு அவர்கள் எழுந்தபோது கட்டையால் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் கணவனும், மனைவியும் மயக்கமடைந்துள்ளனர். இதனை அடுத்து பிரோவில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், செல்போன்களை கொள்ளை அடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின் பிரோவில் இருந்த பணம் மற்றும் செல்போன் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சிடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு புகுந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
