‘திருடிய செல்போனில் செல்ஃபி’.. ‘காட்டிக்கொடுத்த இமெயில்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 17, 2020 09:38 AM

சென்னையில் திருடிய செல்போனில் செல்ஃபி எடுத்து கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai cellphone robbers arrested by police near Kundrathur

சென்னை குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையைச் சேர்ந்தவர் மகேஷ் (35). சமையல் கலைஞரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த இரண்டு செல்போன்கள், கைகடிகாரம் ஆகியவை திருடு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் மகேஷ் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருடப்பட்ட செல்போனில் இருந்து கொள்ளையர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர். உடனே அந்த புகைப்படங்கள் மகேஷின் இமெயிலுக்கு வந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை உடனே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து குன்றத்தூர் கரைமா நகரை சேர்ந்த சின்னத்தம்பி (20), சுரேஷ் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடிய செல்போனில் செல்ஃபி எடுத்து கொள்ளையர்கள் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROBBERY #SMARTPHONE #CHENNAI #SELFIE