‘10வது படிக்குற பொண்ணு’.. ‘பெருமாள் கோயில்ல வச்சு கல்யாணம்’.. தருமபுரி அருகே அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 20, 2020 09:17 AM

தருமபுரி அருகே பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Child marriage for 10th std girl in Dharmapuri 4 persons arrested

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பூமத்தனஅள்ளி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பெரியசாமி (25). இவருக்கும் அப்பகுதியில் 10 வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த பிப்ரவரி 5ம் தேதி பெரியசாமியின் தாய் லட்சுமி, அவரது உறவினர்கள் மாதேஷ், மாது ஆகியோர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறுமியை பெரியசாமி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது 14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார்.

புகாரின் அடிப்படையில் பெரியசாமி, அவரது தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் மாதேஷ், மாது ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளார். அவர்களிடம் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #CHILDMARRIAGE #ARRESTED #DHARMAPURI