‘கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்’.. நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிட்டது குறித்து DCP-ன் ‘தெறி’ ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து நெல்லை மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்ஷய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிப்பட்டது.
இதனை அடுத்து நான்கு பேர்களும் தூக்குதண்டனை நிறைவேறுவதை தடுக்க நீதிமன்றங்களில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுக்கு தூக்குதண்டனை நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களின் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் நான்கு பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்ற தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (20.03.2020) அதிகாலை 5:30 மணியளவில் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து நிர்பயாவின் தாய், தன் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் நிர்பாயா குற்றவாளிகளை தூக்கிலிட்டது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன், ‘கடைசியா.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்’ என தெறி படத்தின் வசனத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
கடைசியாக ..
டீ சொல்லுங்க ராஜேந்திரன்...#நிர்பயா#NirbhayaJustice #nirbhayagetsjustice pic.twitter.com/6c5wNhyhyi
— Arjun Saravanan (@ArjunSaravanan5) March 20, 2020
