இந்த நாட்டில் 'மகாபாவிகள்' மன்னிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால்... எங்களை 'கருணைக்கொலை' செய்து விடுங்கள்... குற்றவாளிகளின் குடும்பத்தினர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 17, 2020 07:05 PM

தங்களை கருணைக்கொலை செய்து விடுமாறு நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Nirbhaya Convicts’ Parents Plead With President Ram Nath Kovind

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வருகின்ற மார்ச் 20-ம் தேதி தூக்குத்தண்டனை வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக பலமுறை தூக்கு தள்ளிப்போனதால் நொந்து போன நிர்பயாவின் தாய் இந்த முறை கண்டிப்பாக தூக்கு நிறைவேற்றப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

இந்த நிலையில் தங்களை கருணைக்கொலை செய்து விடுமாறு நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். அதில், '' இந்த நாட்டில் மகாபாவிகள் மன்னிக்கப்பட்டிருக்கிறார்கள். பழிவாங்குவதற்கு அதிகாரம் தேவையில்லை. மன்னிப்பதற்குத்தான் அதிகாரம் தேவையாக இருக்க வேண்டும்,'' என கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

Tags : #POLICE #JAIL